இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி

Donation protected
தமிழ்த்தாய்க்குப் புது மணிமகுடம் ~ தமிழுக்குப் பணி செய்யும் அழைப்பு ~ தமிழ்த்தாய் அந்தாதி இசை வடிவம் பெற நிதி உதவுங்கள்


மொழி ஓர் இனத்தின் ஆன்ம அடையாளம். தமிழினத்தின் இருப்புக்கு மொழி சார்ந்த, வீச்சுரம் கொண்ட செயற்பாடுகள் தொடர்ந்து  இடம்பெறுவது அவசியமாகும்.  அப்படியான இலக்கை நோக்கிய ஒரு வேலைத்திட்டம் இது.

தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் விதமாகச் செறிவான சொற்களில், அணி அழகு துலங்கும்படி பாவலர் தவ சஜிதரன்  புனைந்திருக்கும் போற்றிப்பாடல் தமிழ்த்தாய் அந்தாதி  ஆகும் (மேலே YouTube காணொளி காண்க).  கேட்கும்தோறும் மனதை ஈர்க்கும் மந்திரத்தன்மை கொண்ட ஒரு படைப்பு.

பேராசிரியர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் முதலானோர் இதனைப் பெரிதும் விதந்து பாராட்டியிருக்கிறார்கள். (தொடர்புடைய பதிவுகள்: https://tinyurl.com/y63445yy)

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழில் அமைந்த அந்தாதி இப்போது இசையாகவும் நாடகமாகவும் முகிழ இருக்கிறது.  இலண்டன் மொழியகம்  இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

முதலாவது காணொளி உயர் தரத்துடன் வெளிவந்து பெருவரவேற்பைப் பெற்றுள்ளது -  பார்வையாளர்கள் இந்தப் படைப்பின் சிறப்பை எவ்விதம் போற்றிப் பேசியிருக்கிறார்கள் என்பதை YouTube comments வழியாகக் காணலாம் (இணைப்பு மேலே காண்க).

இதே தரத்தில் மீதம் இருக்கும் அந்தாதிப் பாடல்களுக்கான காணொளிகளும் வெளிவருவதற்கு உங்கள் மேலான உதவி / கொடை தேவைப்படுகிறது.


தமிழ்த்தாய் அந்தாதிப் பாடல் பற்றி YouTube பார்வையாளர்களின் கருத்துக்கள்:

அந்தாதியின் 30 பாடல்களைக் கொண்டு மொத்தம் 10 இசைக்காணொளிகள் வெளியிடப்பட உள்ளன. 

தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழ வேண்டும் என்னும் நோக்கத்தோடு மொழியகம் முன்னெடுக்கும் இந்த செயல்திட்டத்துக்கு உதவுங்கள்:

ஒரு காணொளிக்கான தயாரிப்புச் செலவு £1200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  முதல் ஐந்து காணொளிகளின் தயாரிப்புக்காக மொத்தம் £6000 நிதி திரட்டப்பட வேண்டி உள்ளது.

இசை உருவாக்கம், காணொளிப் படப்பிடிப்பு, படத்தொகுப்பு, வரைகலை, வேலைத்திட்ட நிர்வாகம் முதலானவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது.

மேலதிக தகவல்களை https://moliyagam.org/ இல் அறிந்து கொள்ளலாம். மொழியகம் வலைத்தளம் வழியாக அல்லது மின்னஞ்சல் வழியாக நம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

இன்று நம்மால் நடப்படும் விதை வளர்ந்து மரமாகி நாளை நமது சந்ததியினருக்குப் பயன் தரும். தொன்மை மிக்க தமிழ்மொழியின் தொடர்ச்சியை உறுதி செய்யக்கூடிய பணியொன்றுக்கு நீங்கள் பங்களித்தவராவீர்கள்!

என்றும் இதயத்தன்பும் நன்றியும்

~ மொழியகம் | moliyagam.org

Organizer

Thava Sajitharan
Organizer

Your easy, powerful, and trusted home for help

  • Easy

    Donate quickly and easily

  • Powerful

    Send help right to the people and causes you care about

  • Trusted

    Your donation is protected by the GoFundMe Giving Guarantee